இந்தியா

உ.பி: புதையலை கண்டுபிடிக்க யாகம் நடத்திய 60 பூசாரிகளுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்த தம்பதி

உ.பி: புதையலை கண்டுபிடிக்க யாகம் நடத்திய 60 பூசாரிகளுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்த தம்பதி

EllusamyKarthik

உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரின் மதுரா கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கீதா பதக் மற்றும் குலாசி ராம் பதக் தம்பதியர் தங்களது ஆசிரமத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள புதையலை  கண்டெடுக்க யாகம் நடத்துமாறு 60 பூசாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி பஹ்ரைச்சை சேர்ந்த திலீப் குமார் பதக் தலைமையில் 60 பூசாரிகள் அந்த ஆசிரமத்திற்கு சென்று 14 நாட்கள் யாகம் நடத்தியுள்ளனர். 

யாகத்தின் இறுதி நாளன்று பூசாரிகள் அனைவருக்கும் சீல் செய்யப்பட்ட வெள்ளை பை ஒன்றை கொடுத்துள்ளனர் தம்பதியினர். 

அதில் பணம் இருப்பதாகவும் வீட்டுக்கு சென்று பிரித்து பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். அதனை நம்பிய பூசாரிகள் வீட்டுக்கு திரும்பியவுடன் பணப்பையை திறந்து பார்த்துள்ளனர். அதில் கள்ள நோட்டுகள் அதிகம் இருந்ததால் திலீப் குமார் பதக் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

அந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். 

‘அவர்கள் இருவரும் கடந்த 2013 முதல் இதேபோல பலரை யாகம் நடத்த வரச்சொல்லி ஏமாற்றியுள்ளனர். உள்ளூர் மக்களிடமிருந்து நன்கொடையை  பெறுவதற்காக அவர்கள் இதை செய்துள்ளனர். இருவரையும் கைது செய்துள்ளோம்’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.