இந்தியா

பாஜக அமைச்சர் கை விரல் துண்டானது: ஒட்ட வைக்க முடியாததால் சோகம்!

பாஜக அமைச்சர் கை விரல் துண்டானது: ஒட்ட வைக்க முடியாததால் சோகம்!

webteam

உத்தரபிரதேச மாநில பாஜக தலைவரும் அமைச்சருமான தேவ் சிங்கின் கை விரல் துண்டானது. 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தும் அதை ஒட்ட வைக்க முடியவில்லை.

உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வந்தந்தரா தேவ் சிங். அம்மாநில அமைச்சராகவும் இருக்கிறார். இவர் நேற்று முஷாபர்நகரில் நடந்த விழா ஒன்றுக்காக தனது காரில் சென்றார். அவரை வரவேற்க ஏராளமான பெண் தொண்டர்கள் கையில் மாலையுடன் முண்டியடித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கும் போது, எதிர்பாராதவிதமாக கார் கதவில் அவரது வலது கை, சுண்டுவிரல் சிக்கிக்கொண்டது. பின்னர் அது துண்டாகி விழுந்தது.

வலியால் துடித்த அவர், தனது துண்டான விரலைத் தேடினார். அது கிடைக்கவில்லை. பின்னர் தொண்டர் ஒருவர் அதை கண்டுபிடித்து எடுத்தார். ஆனால், அதில் அவர் போட்டிருந்த மோதிரம் மாயமாகி இருந்தது. 

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து அவரது கை விரலை ஒட்டவைக்க மருத்துவர்கள் முயன்றனர். ஆனால் அது விரல் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் ஒட்ட வைக்க முடியவில்லை. பின்னர் சிகிச்சை அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.