இந்தியா

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு

EllusamyKarthik

உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்த 46 வயதான மஹிபால் சிங் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பத்தற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார் அந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி.

இந்தியாவில் கடந்த 16-ஆம் தேதி முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

“அவருக்கு சனிக்கிழமை பகல் நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு முழுவதும் அவர் பணியை கவனித்தார். ஞாயிறு அன்று நெஞ்சு வலிப்பதாக சொல்லிய அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார் தலைமை மருத்துவ அதிகாரி.

அவருக்கு உடற்கூறு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவரது மரணத்திற்கு Cardio-Pulmonary நோய் இருந்ததுதான் உயிரிழப்புக்கு காரணம் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.