இந்தியா

16 ஆக குறைந்த ஆக்ஸிஜன் அளவு: 130 நாட்களுக்குப் பின் குணமடைந்த கொரோனா நோயாளி

JustinDurai
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், 130 நாட்களுக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டின் ஈஸ்வர்பூரியில் வசிக்கும் விஸ்வாஸ் சைனி என்ற நபர், கடந்த மே மாதம் 2-ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ஆக்ஸிஜன் அளவு 16 ஆக குறைந்திருந்ததால் விஸ்வாஸ் சைனி உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என மருத்துவர்கள் கருதினர். எனினும் ஒன்றரை மாதம் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வென்டிலேடரில் இருந்த விஸ்வாஸ் சைனி கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார். 130 நாட்களுக்கு கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடிய பிறகு, அவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.