இந்தியா

உலக அளவில் போக்குவரத்து நெரிசலில் முதலிடம் பிடித்தது மும்பை

உலக அளவில் போக்குவரத்து நெரிசலில் முதலிடம் பிடித்தது மும்பை

webteam

உலகத்திலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்கள் பட்டியலில் மும்பை நகரம் முதல் இடம்பிடித்துள்ளது. 

உலக நகரங்களில் நிலவும் வாகன நெரிசல் குறித்து ஆய்வு செய்து ஒரு சர்வதேச தனியார் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 2018ஆம் ஆண்டில் 56 நாடுகளிலுள்ள 403 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரகளின் பட்டியலில் மும்பை நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 

அத்துடன் மும்பை நகரில் காலைநேர 30 நிமிட பயணமானது போக்குவரத்து நெரிசலால் மேலும் 24 நிமிடங்கள் கூடுதலாக செலவாகிறது என்று தெரிவித்துள்ளது. அதேபோல மாலையில் 30 நிமிட பயண போக்குவரத்தானது வாகன நெரிசலால் 31 நிமிடங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

மேலும் மும்பை நகர நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் 56 சதவிகிதமாகவும் பிற சாலைகளில் 73 சதவிகிதமாக  இருந்து வருகிறது என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதே அறிக்கையில் இந்தியாவின் தலைநகரமான டெல்லி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. 

டெல்லியில் காலையில் 30 நிமிட பயணமானது போக்குவரத்து நெரிசலால் 22 நிமிடங்கள் கூடுதலாக செலவாகிறது. அதேபோல மாலை வேளையில் 30 நிமிட பயணம் போக்குவரத்தானது இந்த நெரிசலால் கூடுதலாக 29 நிமிடங்கள் பிடிப்பதாக இந்த  அறிக்கை தெரிவித்துள்ளது. எனினும் டெல்லியில் 2018ஆம் ஆண்டு போக்குவரத்து நெரிசல் 4 சதவிகிதம் குறைந்துள்ளது.