இந்தியா

விமானத்தில் முறைகேடாக நடந்துகொண்டால் பயணிகளுக்கு ஆயுள் தடை - மத்திய அரசு

விமானத்தில் முறைகேடாக நடந்துகொண்டால் பயணிகளுக்கு ஆயுள் தடை - மத்திய அரசு

webteam

விமானத்தில் பயணிகள் முறைகேடாக நடந்துகொண்டால் 3 மாதங்கள் முதல் ஆயுள் முழுக்க பறக்கத் தடைவிதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் விமான ஊழியர்களை திட்டினால் 3 மாதமும், தாக்கினால் 6 மாதமும் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவு, உயிருக்கு அச்சுறுத்தல் விடுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு 2 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை பறக்க தடை விதிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக விமான நிலைய ஊழியர்கள் மீதும், விமானத்தில் உள்ள குழுவினர் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதனை தடுக்கவே இந்த விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.