குழந்தை தத்தெடுப்பு புதிய தலைமுறை
இந்தியா

திருமணம் ஆகாதவர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம்! புதிய வழிகாட்டுதல் வெளியீடு

திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுக்கும் வகையில், பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

PT WEB

திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுக்கும் வகையில், பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

2016 மாதிரி குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதலின்படி, திருமணம் முடித்த குழந்தையில்லா தம்பதிகள் மட்டுமே தத்தெடுக்க முடியும். இந்த விதிகளை திருத்தி, திருமணம் ஆகாத தனி நபர்களும் தத்தெடுக்கும் வகையில், புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 35 வயதிலிருந்து 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள், ஆதரவற்ற இல்லங்களில் வளர்ந்து வரும் 6 வயது நிரம்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம். முதல் இரண்டு ஆண்டுகள் குழந்தை பராமரிப்புக்கு பிறகு தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படும்.

அதேநேரம் ஆண், பெண் என இரு பாலர் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆணாக இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க அனுமதிக்கப்படுவர். மேலும் பெற்ற குழந்தைகள் இருப்பினும், தம்பதிகள் தத்தெடுக்க புதிய சட்டத்தில் இடம் உள்ளது. தத்தெடுப்பு விதிகள் தற்போது தளர்த்தப்பட்டிருப்பதால், கூடுதல் எண்ணிக்கையிலான ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பும், அரவணைப்பும் கொண்ட பெற்றோர் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கொண்டு வந்திருக்கும் இந்த வழிகாட்டு நடைமுறைகள் அனைத்தும், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.