இந்தியா

ரூ.100 கோடி நிதி பற்றாக்குறையில் தள்ளாடும் சென்னை பல்கலைக்கழகம்

ரூ.100 கோடி நிதி பற்றாக்குறையில் தள்ளாடும் சென்னை பல்கலைக்கழகம்

JustinDurai

சென்னை பல்கலைக்கழகம் 100 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் தள்ளாடுவது தெரிய வந்துள்ளது.

நிதிப் பற்றாக்குறையால் ஓய்வூதியம், ஊதியம் வழங்குவதில் எழும் சிக்கல்களைத் தவிர்க்க தமிழக அரசு 88 கோடி ரூபாய் சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்துள்ளது. 1,400க்கும் மேல் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத் தொகை, பேராசிரியர்களுக்கான ஊதியம் போன்றவற்றுக்கே பெரும்பாலான வருவாய் செலவிடப்படுவதால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்களுக்கான ஊதிய மானியம் முழுமையாக கிடைக்க ஏதுவாக தணிக்கை ஆட்சேபனைகளை நீக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தவிர புதிய படிப்புகளை அறிமுகம் செய்வது, , தொலைதூரக்கல்வி வருவாயை இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகம் எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் குறைந்த போக்குவரத்து சேவை: பாதிப்பை பட்டியலிட்ட போக்குவரத்து கழகம்!