இந்தியா

மத்திய அமைச்சக பணி: தனியாரும் விண்ணப்பிக்கலாம்

webteam

ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை மட்டுமே கொண்டு நியமிக்கப்பட்டு வந்த மத்திய அமைச்சகங்களின் இணை செயலாளர்களுக்கு இணையான 10 பதவிகளுக்கு தனியார்துறையை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சகங்களில் உள்ள இணை செயலாளர் பதவிகளுக்கு பொதுவாக ஐஏஎஸ் தேர்வில் தகுதி பெற்றவர்களே தேர்வு செய்யப்படுவர். ஆனால் , அந்த நடைமுறையை மாற்றி முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல ஆர்வமுடைய தகுதியான இந்தியர்கள் இணை செயலாளருக்கு இணையான அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு விளம்பரப்படுத்தியுள்ளது. 

வருவாய், நிதித்துறை, பொருளாதாரம், வேளாண்மை, விவசாயிகள் நலன், சாலை போக்குவரத்து. சுற்றுச்சூழல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த தகுதியான 10 இந்தியர்கள் தேவைப்படுவதாக அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை செயலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் இவர்களுக்கும் வழங்கப்படும்.