nirmala sitharaman pt web
இந்தியா

82 நிமிட பட்ஜெட் உரை; அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் எவை? இடம்பெறாத தமிழ், தமிழ்நாடு வார்த்தை!

PT WEB

பட்ஜெட் உரையை, ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் வாசித்தார் நிர்மலா சீதாராமன். இந்த உரையில், நமது அரசு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, டிஜிட்டல், விவசாயம், திறன் உள்ளிட்ட வார்த்தைகளை அதிகம் உச்சரித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

குறிப்பாக, வளர்ச்சி என்ற வார்த்தை 54 முறை இடம்பெற்றது. ஒவ்வொரு திட்டத்தையும் கூறும்போது வளர்ச்சி என்ற வார்த்தையை முன் வைத்து, அவர் பேசினார். இதற்கு அடுத்ததாக, வேலைவாய்ப்பு என்ற வார்த்தையை 33 முறையும், நமது அரசு என்ற சொல்லை 24 முறையும் கூறினார். திறன் மேம்பாடு என்ற வார்த்தையை 23 முறையும், முதலீடு என்று, 21 முறையும், பெண்கள் என 13 முறையும் கூறினார். இதேபோல தொழில்துறை என்று 11 முறையும், டிஜிட்டல் என 11 முறையும் உச்சரித்தார். மேலும் நிதிஅமைச்சர் பேசும் போது, வேளாண்மை என்ற வார்த்தை 7 முறையும், வளர்ச்சியடைந்த இந்தியா என பொருள்படும், விக்ஷித் பாரத் என்ற வார்த்தையை நான்கு முறையும் குறிப்பிட்டார்.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த வித அறிவிப்பும் இல்லாததால், தமிழ்நாடு என்ற வார்த்தை உரையில் ஒரு முறை கூட இடம்பெறவில்லை. ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த 2 மாநிலங்களின் பெயர்களை, தலா 5 முறை நிர்மலா சீதாராமன் உச்சரித்தார். மத்திய பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு எந்த அறிவிப்புமே இல்லை. ஆனால், ஒரே ஒரு முறை மட்டுமே ரயில்வே என்ற வார்த்தை இடம்பெற்றது. அதுவும் கூட, ஆந்திர மாநிலத்தில் ரயில்வே துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பில் மட்டுமே, ரயில்வே என்ற வார்த்தையை உச்சரித்தார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்

வழக்கமாக, நிர்மலா சீதாராமன் தனது உரையில் ஏதேனும் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டுவார். ஆனால், இந்த பட்ஜெட் உரையில் அவர் திருக்குறளை சுட்டிக்காட்டவில்லை.