இந்தியா

மாநில அரசுகளும் கலால் வரியை குறைக்கவேண்டும்: பெட்ரோலியத்துறை அமைச்சர்

மாநில அரசுகளும் கலால் வரியை குறைக்கவேண்டும்: பெட்ரோலியத்துறை அமைச்சர்

webteam

பெட்ரோல், டீசல் விலை குறைய மத்திய அரசு போல், மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். 

பெட்ரோல் விலை கடந்த 2 மாதங்களில் லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் அதிகரித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வெளியான நிலையில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தி, மாநில அரசுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியில் மாநிலங்கள் 5 சதவிகிதத்தை குறைத்தாலே மக்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.