செயற்கையான முறையில் வானிலையில் மாற்றம் செய்து, மழையை பொழிய வைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணி வெற்றிகரமாக அமைவதில் பல சவால்கள் உள்ளதாகவும் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், அடுத்த 18 மாதங்களில் ஆய்வக சோதனைகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சோதனைகளும் முடிவடைந்த பின்னர், அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை மழையை பொழியவைப்பது, மழையை நிறுத்துவது, ஆலங்கட்டி மழை பொழியவைப்பது, மின்னலை உருவாக்குவது போன்றவற்றை சாத்தியமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வானிலை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ள புதிய செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முழுக் கட்டுரைத் தொகுப்பைப் பற்றி அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.
இதையும் படிக்க: வரலாற்றில் முதல்முறை.. விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர்!