இந்தியா

ஹோட்டலுக்கு சாப்பிட போறீங்களா? பில் கட்டும்போது இதை கவனித்தில் கொள்ளவும்

Sinekadhara

உணவகங்களில் சேவை கட்டணத்தை சேர்த்து ஜிஎஸ்டியை வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உணவகங்கள் சேவை கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், உணவகங்களில் சாப்பிட்ட மொத்தத் தொகையில் சரக்கு மற்றும் சேவை கட்டணத்தை விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் எந்த ஒரு பெயரிலும் சேவை கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்றும் சேவை கட்டணத்தை செலுத்துமாறு நுகர்வோரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சேவை கட்டணத்தை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பதை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. விதிகள் மீறப்பட்டால், 1915 என்ற எண்ணிலோ அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் செயலி மூலமோ புகார் அளிக்கலாம் என்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.