இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17%இல் இருந்து 28% ஆக உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17%இல் இருந்து 28% ஆக உயர்வு

Sinekadhara

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17%இல் இருந்து 28% ஆக உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அறிவித்திருக்கிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே 2020ஆம் ஆண்டிற்கான 2 அக விலைப்படி உயர்வு தவணைகள், 2021ஆம் ஆண்டிற்கான ஒரு அகவிலைப்படி உயர்வு தவணை ஆகியவற்றை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

இது ஜூலை 1 முதல் கணக்கிடப்பட்டு நடைமுறைக்கு வருவதாக அவர் அறிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 17%இல் இருந்து 28%ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்தகட்டமாக மாநில அரசுகளும் இந்த முறையை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.