இந்தியா

நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி

நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி

Veeramani

கடன் மோசடி தொடர்பாக இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் அனுமதியளித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இங்கிலாந்து தப்பிச் சென்ற நிரவ் மோடி இந்திய அரசின் கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புவதை எதிர்த்து நிரவ் மோடி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது வாதங்களை நிராகரித்தது. இதையடுத்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்ப அனுப்ப அந்நாட்டு உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் அனுமதியளித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.