இந்தியா

குட்டி விமானம் மூலம் உணவு விநியோகம் : 'உபர் ஈட்ஸ்' நிறுவனம்

குட்டி விமானம் மூலம் உணவு விநியோகம் : 'உபர் ஈட்ஸ்' நிறுவனம்

webteam

ஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு பெருட்களை வாடிக்‌கையாளர்களிடம் கொண்டு சேர்க்க உபர் ஈட்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உணவகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும் காலம் மாறி, வீட்டிற்கே சாப்பாட்டை வரவைத்து உண்ணும் நிலை இன்று நடைமுறையில் உள்ளது. சாப்பாட்டை ஆர்டர் செய்தால் டெலிவரி செய்வது ஒரு நபராகவே இதுநாள் வரை இருந்தது. ஆனால் தற்போது அந்த வேலையை ஆளில்லா ட்ரோன் விமானங்கள் செய்ய உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் வெற்றியடைந்த நிலையில் ஆளில்லா விமானம் மூலம் உணவு பெருட்களை வாடிக்‌கையாளர்களிடம் கொண்டு சேர்க்க “உபர் ஈட்ஸ்” நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னை உட்பட பல நகரங்களில் அதிவிரைவாக வளர்ச்சி அடைந்துள்ள ‘உபர் ஈட்ஸ்’ நிறுவனம், வாடிக்கையாளர் வ‌சப்படுத்தி அதிவிரைவாக உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்க இந்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ பல்கலைக்கழகம் மற்றும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்து அதற்கான சோதனை மேற்கொண்டது.

அந்த சோதனை வெற்றி பெற்றதால் பிற நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாக உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பல்வேறு உணவகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் “உபர் ஈட்ஸ்” நிறுவனம் தெரிவித்துள்ளது.