இந்தியா

கேரளாவுக்கு ஐக்கிய அரபு ரூ.700 கோடி நிதி !

Rasus

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூபாய் 700 கோடி நிதியுதவி வழங்குவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இடைவிடாத மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கேரளா. இதுவரை 300-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் தங்களது வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். எனவே கடும் சேதத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல மாநிலங்களில் இருந்தும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த பணத்தையோ, உணவுப் பொருட்களையோ வழங்கி வருகின்றனர். கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக ரூபாய் 21,000 கோடி தேவை என கேரளா அரசு கோரியுள்ளது. ஆனால் முதற்கட்டமாக மத்திய அரசு ரூபாய் 600 கோடியை மட்டுமே ஒதுக்கியது. இந்நிலையில் ரூபாய் 700 கோடியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட் வழங்குகிறது. இந்த தகவலை கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார்.