இந்தியா

170 டன் நிவாரணப் பொருட்களுடன் வருகிறது 12 எமிரேட்ஸ் விமானங்கள்!

webteam

170 நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸ் நிறுவனத்தின் 12 கார்க்கோ விமானங்கள்  கேரளாவுக்கு வருகிறது. 

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் இந்த ஆண்டு கடும்மழை பெய்தது. மழை வெள்ளம் காரணமாகவும் நிலச்சரிவு காரணமாகவும் 231 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். இன்னும் சுமார் 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அங்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மழையால் கடும் பாதிப்புக்குள்ளான கேரளாவுக்கு உதவிகள் குவிந்துவருகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் அளித்த நன்கொடையால் சுமார் 170 டன் நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்காக திரட்டப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் அரசுக்கு சொந்தமான எமிரேட்ஸ் விமானத்தின் ஸ்கை கார்கோவின் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. இதற்காக 12 கார்க்கோ விமானங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.