இந்தியா

டெல்லியில் மீண்டும் கொடூரம்: பொதுக் கழிப்பறைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

டெல்லியில் மீண்டும் கொடூரம்: பொதுக் கழிப்பறைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

jagadeesh

டெல்லியில் பொதுக் கழிப்பறைக்கு சென்ற 13 வயது சிறுமியை கடத்திச் சென்ற இருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு டெல்லியின் ஜேஜே காலனி பகுதியில் குடும்பத்துடன் 13 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அச்சிறுமி பொதுக் கழிப்பறையை பயன்படுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது பக்கத்துவீட்டு நபர் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். பின்பு அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு அந்தச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு நண்பர் ஒருவரும் உதவியாக இருந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்த பின்பு, அந்த நபர் தப்பியோடியுள்ளார். சிறுமி வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் சிறுமியை தேட தொடங்கியுள்ளனர். பின்பு சிறுமியை கண்டுப்பிடித்துள்ளனர். மேலும் சிறுமியின் வாக்குமூலத்தை வைத்து போலீஸில் புகாரளித்தனர். இதனையடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அந்த நபரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.