இந்தியா

ஜம்மு காஷ்மீர் வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு

ஜம்மு காஷ்மீர் வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு

webteam

டொனால்ட் ட்ரம்ப்பின் குடியேற்ற உத்தரவால் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஸ்னோ ஷூ எனும் பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் இருவருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிரியா, லிபியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த்அ தடை 90 நாட்களுக்கு இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்தநிலையில், நியூயார்க்கில் பிப்ரவரி 24-25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் உலக ஸ்னோ ஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள இருந்த அபித் கான் மற்றும் தன்வீர் கான் ஆகியோருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கை அடுத்த சரானாக் கிராமத்தின் மேயர் க்ளைட் ரபீடூ இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.