இந்தியா

கனடா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் அறிமுகமானது ட்விட்டரின் எடிட் வசதி! இந்தியாவில் எப்போது?

கனடா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் அறிமுகமானது ட்விட்டரின் எடிட் வசதி! இந்தியாவில் எப்போது?

ச. முத்துகிருஷ்ணன்

ட்விட்டர் நிறுவனம் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள அதிகாரப்பூர்வ பயனர்களுக்கு தங்கள் இடுகைகளை எடிட் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. விரைவில் அமெரிக்காவிற்கும் இச்சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் முன்னணியில் இருக்கின்றன. பல்வேறு செய்திகளும் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி விடுகிறது. அவ்வாறு பரவும் செய்தியில் தவறு ஏதேனும் இருந்தால், ட்விட்டரில் அதை திருத்த (எடிட் செய்ய) இயலாது. மாறாக நாம் மொத்த பதிவையே நீக்க வேண்டியுள்ளது.

இதற்கு தீர்வு காண மற்ற சமூக வலைதளங்களை போல பதிவுகளை திருத்தும் வசதியை அதாவது எடிட் செய்யும் வசதியை வழங்குமாறு பல ஆண்டுகளாக பயனர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பதிவுகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

தற்போது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள ட்விட்டர் புளூ டிக் வசதி கொண்ட பயனர்களுக்கு ட்வீட்களைத் திருத்தும் விருப்பத்தை ட்விட்டர் வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த அம்சம் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்வீட்களை திருத்தும் அம்சம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் சமீபத்தில் எடிட் செய்யப்பட்ட ட்வீட் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணத்தையும் பகிர்ந்துள்ளது.

இடுகையின் கீழே ‘Last Edited’ என்ற லிங்கை கிளிக் செய்தால், என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் பார்க்கலாம். அசல் ட்வீட் மற்றும் திருத்தப்பட்ட இரண்டும் ஒரே ஐடியைக் கொண்டிருக்கும், ஆனால் அசல் ட்வீட் ஐடியில் "/வரலாறு" என்ற வித்தியாசமான URL ஐக் கொண்டிருக்கும். 'திருத்து பொத்தான்' பயனர்கள் எழுத்துப் பிழைகளைச் சரிசெய்ய, தவறவிட்ட குறிச்சொற்களைச் சேர்க்க மற்றும் பலவற்றை எடிட் செய்ய அனுமதிக்கும். இந்தியாவிலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் இவ்வசதி அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.