இந்தியா

ஐபிஎல் 2020 பாடல் காப்பி அடிக்கப்பட்டதா? பிரணவ் மறுப்பு

ஐபிஎல் 2020 பாடல் காப்பி அடிக்கப்பட்டதா? பிரணவ் மறுப்பு

webteam

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2020 போட்டிக்கான பிரத்யேகப் பாடலுக்கு பிரணவ் அஜய்ராவ் மால்ப்பே இசையமைத்திருந்தார். அந்தப் பாடல் 2017 ம் ஆண்டு வெளிவந்த தன்னுடைய ராப் பாடலான "தேகோ கோன் ஆயா வாப்பாஸ்" என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இசைக்கலைஞர் கிருஷ்ணா என அழைக்கப்படும் கிருஷ்ணா கவுல் குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது ஐபிஎல் 2020 பாடல் ஒரிஜினல் என்பதற்கான ஆதாரமாக இந்திய இசையமைப்பாளர்கள் சங்கம் வழங்கிய சான்றிதழை பிரணவ் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி சமூகவலைதளத்தில் கருத்தை வெளியிட்டுள்ள கிருஷ்ணா, "எனக்கு அச்சமாக இருக்கிறது. ஹிப் ஹாப் பாடல்களை காப்பியடிப்பது அனுமதிக்கப்பட்டதுதான் என்பதாக இந்திய இசையமைப்பாளர்கள் சங்கம் சொல்கிறது. ஏனெனில் எல்லா ஹிப் ஹாப் பாடல்களும் ஓரே மாதிரியான ஓசையைத்தான் கொண்டுள்ளன. சபாஷ்" என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐபிஎல் பாடலை எந்தப் பாடலில் இருந்தும் காப்பி செய்யவில்லை என்றும் அது தன்னுடைய ஒரிஜினல் என்றும் மறுத்துள்ளார் இசையமைப்பாளர் பிரணவ் அஜய்ராவ்.

"இரு பாடல்களையும் ஒப்பிட்டு இந்தியாவின் சிறந்த நான்கு இசையமைப்பாளர்கள் எனக்கு சான்றிதழ் அளித்துள்ளார்கள். இரண்டு பாடல்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.