இந்தியா

ட்ரம்பிற்கு சிலை வைத்து வழிபடும் தெலங்கானா விவசாயி

jagadeesh

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதை முன்னிட்டு தெலங்கானாவை சேர்ந்த பஸ்சா கிருஷ்ணா என்ற விவசாயி தனது வீட்டில் ட்ரம்பின் சிலை ஒன்றை நிறுவியுள்ளார்.

6 அடி உயரமுள்ள ட்ரம்பின் சிலையின் நெற்றியில் திலகம் வைத்து, மாலை அணிவித்து தினம் ஆரத்தி அபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறார். ட்ரம்ப் ஒரு வலிமையான தலைவர் எனக்கூறும் விவசாயி கிருஷ்ணா, அவரது துணிச்சலான செயல்பாடுகள் பிடித்ததால் அவருக்கு சிலை வைத்ததாக கூறுகிறார். இதனை அமைக்க கிருஷ்ணா ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதையடுத்து ட்ரம்பின் பாதுகாப்பு வாகனம் அகமதாபாத்திற்கு கொண்டுவரப்பட்டது. வரும் 24ஆம் தேதி 2 நாள்கள் அரசுமுறைப் பயணமாக மனைவி மெலனியாவுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகிறார். அகமதாபாத் மற்றும் டெல்லிக்கு ட்ரம்ப் வருவதையடுத்து அப்பகுதிகளில் பல அடுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் அவரது அணிவகுப்பில் இடம் பெறும் பாதுகாப்பு வாகனம் ஒன்று அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இராணுவ பாணியில் தயாரிக்கப்பட்ட இந்த கார், எத்தகைய தாக்குதலையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக வல்லபாய் படேல் மைதானத்தில் மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.