உத்தரப்பிரதே மாநிலத்தில் கணவர் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்ததால் மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
பஸ்தி மாவட்டத்தில் ஷப்னம் மிஷன் என்பவர், தனது மனைவியிடம் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தலாக் விவாகரத்து முறைக்கு தடை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசும் முத்தலாக் முறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த நிலையில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ஒன்றரை ஆண்டுகளுக்குள் முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் பலரது வாழ்க்கை பாதிக்கப்படுவதால் இந்த நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாகவும் அரசு இதில் தலையிடத் தேவையில்லை என்றும் முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் கூறியுள்ளது.