அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம் இன்று மதியம் ஏற்பட்டது.
திரிபுரா மாநிலம் அம்பாஸா பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது. மேலும், வங்கதேசம், மியான்மரின் வடக்குப் பகுதி மற்றும் பூட்டான் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. வங்கதேச எல்லையை மையமாகக் கொண்டு இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவாகி வருவதாக ஏற்கனவே ஆய்வு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.