Aanvi Kamdar Instagram
இந்தியா

மும்பை: ரீல்ஸ் எடுக்கச்சென்று 300 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த பெண்!

Jayashree A

எத்தனை பெரிய படிப்பும், வேலையும் இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். உதாரணமாக ஒரு சிலருக்கு ஊர் சுற்றுவது பிடிக்கும், இன்னும் சிலருக்கு வகைவகையாக சாப்பிட பிடிக்கும், இன்னும் சிலருக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக பிடிக்கும்... அப்படி மக்கள் மத்தியில் பிரபலமான பெண் ஒருவர், ரீல்ஸ் எடுக்கும் போது தவறி கீழே விழுந்து இறந்துள்ளார்.

அன்வி கம்தார்

மும்பையைச் சேர்ந்தவர் அன்வி கம்தார். 27 வயதான இவர் பட்டயக் கணக்காளார் (CA) படித்துள்ளார். இவரது பொழுதுபோக்கு சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதும், உலகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களுக்கு சென்று அதன் அழகினையும், அதிசயங்களையும் பார்ப்பதும் என்று இருந்துள்ளார். இத்துடன் அடிக்கடி ஷாப்பிங் செல்வது, எந்த ஊர்களில் என்ன ஸ்பெஷல் என கண்டுபிடித்து Vlog செய்வது என்றும் இருந்துள்ளார். இன்ஸ்டாவில் ட்ராவல் இன்ஃப்ளூயென்சரான (Travel Influencer) இவருக்கு லட்டக்கணக்கில் ஃபாளோயர்ஸ் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் மங்கானில் புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சியின் அழகை வீடியோ எடுப்பதற்காக தனது நண்பர்கள் ஏழு பேருடன் சென்றுள்ளார். அங்கு பள்ளத்தாக்கின் நுனியில் நின்று வீடியோ எடுத்தபொழுது கால் தவறி 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

அன்வி கம்தார்

உடனடியாக நண்பர்கள் உள்ளூர் மீட்புப் படையினரின் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையறிந்த அவரது ஃபாலோயர்ஸ் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்ஃப்ளூயென்சர்கள், ஆர்வ மிகுதியில் இப்படியான ஆபத்தான இடங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் வலியுறுத்தலுமாக இருக்கிறது.