சபரிமலையில் கடந்த 24 நாட்களில் ரூ.125 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தலைவர் அனந்த கோபன் தகவல் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்ட்டது. நேற்று டிசம்பர் 9ஆம் தேதி வரையிலான கடந்த 24 நாட்களில் காணிக்கை மற்றும் சபரிமலை பிரசாதங்களான அப்பம், அரவணா மூலம் இதுவரை ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் அரவணா பிரசாதம், தேவஸ்வம் போர்டு சார்பில் சொந்தமாக தயாரிக்கப்படும் டின்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
இதற்காக டின்கள் உற்பத்தி ஆலை அமைக்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்த ஆலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த டின்கள் தயாரிக்கப்படும். ஐயப்ப பக்தர்களின் சுப தரிசனத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவசொலம்போடு மேற்கொண்டு வருகிறது என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தலைவர் அனந்த கோபன் சபரிமலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.