இந்தியா

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Veeramani

சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய குடியசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டது, சஞ்சிப் பானர்ஜி இடமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கொலீஜியம் அளித்த உத்தரவை அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஆர்ட்டிகிள் 222, பகுதி (1)-ன் அடிப்படையில் இந்த இடமற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பிரிவின் அடிப்படையில் இடமாற்றம் செய்ய இரண்டு காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. ஒன்று, நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் சிறப்பான பணிகளை மற்றொரு நீதிமன்றத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்வது. மற்றொன்று, நீதிபதியில் நடவடிக்கைகளில் உள்ள சிக்கல் காரணமாக மற்றொரு நீதிமன்றத்திற்கு அவரை இடமாற்றம் செய்வது. ஆனால், எந்த காரணத்தின் அடிப்படையில் நீதிபதி இடமாற்றம் செய்யப்படுகிறார் என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்பது கடை பிடிக்கப்பட்டு வரும் மரபு.