மின்னணு பணப் பரிமாற்ற முறையான NEFT மூலம் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்து 8 மணி நேரத்தில் 11 லட்சத்து 40 ஆயிரம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கிக் கணக்கில் NEFT மூலம் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் என்ற நடைமுறையை ரிசர்வ் வங்கி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு முதல் அமல்படுத்தியது. இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை 11 லட்சத்து 40 ஆயிரம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் இனி NEFT மூலம் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.