முக்கிய குற்றவாளி விபரீத முடிவு pt desk
இந்தியா

கர்நாடகா மகாலட்சுமி கொலை வழக்கு: போலீசார் சந்தேகித்திருந்த முக்கிய குற்றவாளி எடுத்த விபரீத முடிவு!

பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த மகாலட்சுமி என்ற பெண்ணை கொலை செய்து, உடல் பாகங்களை 30 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த சம்பவத்தில் போலீசார் சந்தேகித்திருந்த முக்கிய குற்றவாளி ஒடிசாவில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூருவில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி வாடகை குடியிருப்பில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததார். தொடர் மின்வெட்டால் அந்த உடல் அழுகி இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதில் முதலில் அப்பெண்ணின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின் அது 59 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது.

படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் மகாலட்சுமி என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது ஆண் நண்பர்தான், கொலையின் பின்னணியில் இருக்கலாம் என்று அவரது கணவர் காவல்துறையிடம் கூறியிருந்தார். அதன்பேரில், மகாலட்சுமியுடன் பணியாற்றுபவர்தான், முக்கிய குற்றவாளி என்று காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர்.

மகாலட்சுமி

இந்த நிலையில் போலீசார் விசாரணையில், மகாலட்சுமியை வணிக வளாகத்தில் உள்ள கடையில் சக ஊழியராக வேலை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முக்தி ராஜன் பிரதாப் ராய் (28) எனப்வர்தான் கொலை செய்திருப்பார் என சந்தேகிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் போது முக்தி ராஜனின் செல்போன் மேற்கு வங்க மாநிலத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் சென்றிருந்தனர். பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் காட்டுப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் தெரிந்ததும் உடனே போலீசார் அங்கு சென்று முக்தி ராஜனை தீவிரமாக தேடினர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், முக்தி ராஜன் அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

தற்கொலை தீர்வல்ல

இதை பார்த்து தனிப்படை போலீசார் அதிர்ச்சிடைந்தனர். போலீசார் தன்னை நெருங்கி வருவதை அறிந்த முக்தி ராஜன் போலீசில் சிக்காமல் இருக்க தற்கொலை செய்ய முடிவு செய்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உள்ளூர் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.