கர்நாடகாவில் மனதைக் கவரும் கோகாக் நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகாக் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் அருவியின் உச்சிக்கு சென்று புகைப்படம், செல்பி எடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மகாராஷ்டிர மாநிலம் பெல்காம் பகுதிகளில் பெய்து வரும் மழையால், கோகாக் அருவியில் பால் நுரை போல் ஆர்ப்பரித்து கொட்டியதால், 180 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியை காண சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆபத்தை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் அருவியின் உச்சிக்கு செல்வதுடன், சிலர் அருவிக்கு மேலே உள்ள பாறைகளில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கோகாக் அருவியில் சுற்றுலாப் பயணிகளின் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தோன்றுவதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.