இந்தியா

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியை காணக் குவிந்த மக்கள்

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியை காணக் குவிந்த மக்கள்

நிவேதா ஜெகராஜா

அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகளைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ரூ.1,100 கோடி செலவில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் தெரிவித்துள்ளார். இந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுமான பணிகளை நிர்வகிக்கவும், கோவில் நிர்வாகத்தை கவனிக்கவும் அமைக்கப்பட்டுள்து. இங்கு ராமரை பிரதிஷ்டை செய்ய உள்ள கோயில் மட்டுமே 300 முதல் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளையில் இதுவரை 100 கோடி ரூபாய் நன்கொடை ஆன்லைன் மூலம் பெற்றது.

161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த கோயில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட பிரத்யேக கற்கள் மூலமாக கட்டப்படுகிறது. ஏராளமான பணியாளர்கள் இரவு, பகலாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பார்வையிடுதற்காகவும் வழிபாடு செய்வதற்காகவும் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.