இன்றைய டாப் செய்திகளில் சில...
- கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் 3 ஆயிரம் மையங்களில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
- மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடக்கிவைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் 166 மையங்களில் போடப்படுகிறது
- காணும் பொங்கலையொட்டி பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைக்கிறார்.
- பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கல்லூரி மாணவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. முறைகேடு புகார் தெரிவித்து இரண்டாம் பரிசை பெற மறுத்து வெளியேறிய வீரரால் சலசலப்பு ஏற்பட்டது.
- வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் அரசு நடத்திய 9ஆவது பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
- மீண்டும் வரும் 19ஆம் தேதி பேச்சவார்த்தை நடைபெறும் என அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.
- பருவம் தப்பிய மழையால் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இன்று பிற்பகல் அவருடைய உடல் தகனம் செய்யப்படுகிறது.
- ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் ஒரு யானை படுகாயமடைந்தது. மயக்க ஊசி செலுத்தி மீட்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தனிநபர் தரவுகள் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் புதிய நிபந்தனைகளை வாட்ஸ் அப் நிறுவனம் நிறுத்திவைத்தது.
- இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ரன்களை குவித்துள்ளது. லபுஷேன் சதத்தால் முதல் நாளில் 274 ரன்கள் சேர்த்துள்ளது.