இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள்|மருத்துவ மாணவர் சேர்க்கை முதல் AI கேமராக்கள் மூலம் விபத்துக்கள் தடுப்பு வரை

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, மருத்துவ மாணவர் சேர்க்கை முதல் AI கேமராக்கள் மூலம் விபத்துக்கள் தடுப்பு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழ்நாட்டில் 65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய வகையில் 17, 616 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

  • தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இன்று தொடக்கம். சுமார் 12, 000 இடங்களுக்கு 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

  • மதுரையில் வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டம்.

  • பங்காளி கட்சிகளான திமுக, அதிமுகவுடன் சேரப்போவதில்லை என்று அண்ணாமலை திட்டவட்டம். மேலும், பாஜக தலைமையில் மாமன், மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என விஜய் குறித்த கேள்விக்கு சூசக பதில்.

  • திருச்சி எஸ்.பி. வருண்குமார் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், தனக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையிலேயே வருண்குமார் குறித்து பேசியதாக சீமான் தரப்பு விளக்கம்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை பிடிக்க சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்.மேலும், மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் விசாரணை..

  • எம்.பாக்ஸ் நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.மேலும், வைரஸ் பரவலை கண்காணிப்பது, சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை.

  • ஈரோடு அருகே டி.என்.பாளையத்தில் கல்குவாரி விபத்தில் உடல் சிதறி தொழிலாளர்கள் இருவர் மரணம்.இந்நிலையில், தலைமறைவான குவாரி உரிமையாளர்களுக்கு காவல்துறை வலைவீச்சு.

  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களை பயன்படுத்தி விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் ஜெய வர்ம சின்ஹா தகவல்.

  • டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்திலிருந்து மாற்றம். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவிப்பு.