இன்றைய காலை தலைப்புச் செய்திகள் Facebook
இந்தியா

நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு- முடிவுக்கு வந்த இந்தியாவின் 27 ஆண்டுகால வெற்றி!

PT WEB
  • 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் ஒலிம்பிக் இறுதிச்சுற்றில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகத். கடைசி நேரத்தில் பறிபோன பதக்க வாய்ப்பால் நொறுங்கியது இந்தியர்களின் இதயம்.

  • வினேஷ் போகத் விஷயத்தில் பலனளிக்காத இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மேல்முறையீடு.

  • 100கிராம்தான் என ஒருவருக்கு அனுமதியளித்தால், மற்றவர்களும் அதை எதிர்பார்ப்பார்கள் என சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டம்.

  • இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு; விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு

  • வினேஷ் போகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதியளித்துள்ளார்.

  • வினேஷ் போகத் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனக்கூறி மாநிலங்களவையிலிருந்து INDIA கூட்டணி எம்.பிக்கள் வெளியேற்றம்.

  • சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை. மேலும், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தவகையில், நாடாளுமன்றக் குழு பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

  • சமூகவலைதளங்களில் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த சர்ச்சையில் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது மத்திய அரசு.

  • வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்.

  • புவி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ். செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ திட்டம். இந்நிலையில், வரும் 15ம் தேதி விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் .

  • வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான் 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு ராஸ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

  • ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் 199 புள்ளிகளுடன் நான்காவது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் மீராபாய் சானு.

  • பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை அன்டிம் பங்காலின் அனுமதி சீட்டை முறைகேடாக பயன்படுத்தியதாக அவரது சகோதரி மீது புகார்.

  • அடுத்தாண்டு பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவர் பூமி திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார்.

  • இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இலங்கை .இந்தியாவின் 27 ஆண்டுகால வெற்றி முடிவுக்கு வந்தது.