காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|LIC இணையதளத்தில் இந்தி முதல் மின்சார வாகன ஷோரூமில் பயங்கர தீவிபத்து!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது,LIC இணையதளத்தில் இந்தி முதல் மின்சார வாகன ஷோரூமில் பயங்கர தீவிபத்தில் பெண் ஒருவர் பலி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு தம்பதி பிரிவதாக அறிவிப்பு. தீர்க்க முடியாத இடைவெளி உருவானதால் கடினமான முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா விளக்கம்.

  • எதிர்பாராவிதமாக, தங்கள் திருமணவாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது எனவும், உடைந்த அத்தியாயத்தில் பயணிக்க தொடங்கி இருப்பதாக ஏ.ஆர்.ரகுமான் பதிவு.

  • மகாராஷ்டிராவில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு. ஜார்க்கண்ட்டிலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு தயாராகும் மக்கள்.

  • உலக மக்கள் அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டும் என ஜி20 மாநாட்டின் இறுதி நாளில் பிரதமர் மோடி பேச்சு.

  • LIC இணையதளம் இந்திமயமாக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை மிதித்து பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு எனவும் சாடல்.

  • எல்ஐசி நிறுவன வலைத்தளத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்.

  • 2026 தேர்தலில் அதிமுக வெற்றிபெறாவிட்டால் சிறிய கட்சிகள் வலுப்பெறும் சூழல் உருவாகும் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி பேச்சு.

  • தெலுங்கு மக்களை இழிவாக பேசிய வழக்கில் பிணை கேட்டு கஸ்தூரி தாக்கல் செய்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

  • திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில், ஒருவருக்கு அறநிலையத்துறையில் பணி. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தகவல்.

  • கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுமா? ... இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

  • பாலிஹோஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் ரெய்டு.

  • பெங்களூருவில் மின்சார வாகன ஷோரூமில் பயங்கர தீவிபத்து. விற்பனையாளராக பணியாற்றி வந்த பெண் தீயில் சிக்கி உயிரிழந்த சோகம்.

  • ரஷ்யாவின் எல்லையோர பகுதிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதில், 6 ஏவுகணைகளை வீசி தாக்கியதாக ரஷ்ய ஊடகம் தகவல்.

  • வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி என வானிலை ஆய்வு மையம் தகவல்.