Headlines Facebook
இந்தியா

Headlines|தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு - திடீர் கோஷம் எழுப்பிய தவெக நிர்வாகிகள்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு முதல் திடீர் கோஷம் எழுப்பிய தவெக நிர்வாகிகள் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவமனையில் தீ விபத்தால் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 35க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க இரண்டு பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைப்பு.

  • சேலம், ஈரோடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்தது. திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய மழையால் பக்தர்கள் சிரமம்.

  • கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து சபரிமலையில் அதிகாலையிலேயே பக்தர்கள் தரிசனம்.இந்நிலையில்,. ஏராளமானோர் திரளும் நிலையில் அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • திருவண்ணாமலையில் கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஐப்பசி மாத பெளர்ணமி நாளை முன்னிட்டு வழிபாடு.

  • வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வதற்கு ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

  • கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் ஏன் விசாரிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

  • ஆளுநர் மாளிகையில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கருத்தரங்க அழைப்பிதழில், காவி உடையில் திருவள்ளுவரின் படம் பொறிக்கப்பட்டிருப்பதால் சர்ச்சை.

  • தவெக தலைவர் விஜய் புரிதல் இல்லாமல் பேசுவதாக சரத்குமார் விமர்சனம். மக்கள் பிரச்னைகளை எடுத்துரைத்து விஜய் அரசியல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.

  • தூத்துக்குடியில் விஜய் கட்சி நிர்வாகிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து திடீர் கோஷம். மாவட்ட செயலாளர் பதவிக்காக ஒரு தரப்பினர் தொடர்ந்து முழக்கமிட்டதால் பரபரப்பு.

  • நெல்லை மாவட்ட நிலஎடுப்பு தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். நாம் தமிழர் கட்சி பணிகளை மேற்கொண்டதாக எழுந்த புகாரில் நடவடிக்கை.

  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி. 3க்கு ஒன்று எனும் கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்.

  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல். சிக்சர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டியதால் ரசிகர்கள் கொண்டாட்டம்.

  • இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 159 இடங்களை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி முன்னணி. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி 40 இடங்களை மட்டுமே பெற்று இரண்டாம் இடம்.

  • தெற்காசியா, அரபு நாடுகளில் தென்பட்ட நடப்பாண்டின் கடைசி சூப்பர்மூன் நிகழ்வு. வானில் தோன்றிய அற்புத காட்சியை கண்டு ரசித்த மக்கள்.

  • ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா திடீர் மரணம். மஞ்சள் காமாலையால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.