இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | மக்களவையில் ராகுலின் ஆவேச பேச்சு To மாணவர் தலையில் பாய்ந்த ஈட்டி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மக்களவையில் ராகுல்காந்தியின் வாதம் முதல் மாணவர் தலையில் பாய்ந்த ஈட்டி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஆக்கபூர்வமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்.

  • மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால், விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • சிவகங்கை பாஜக நிர்வாகி கொலை வழக்கில், விசாரணையின் போது தப்ப முயன்ற நபரை துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.

  • தமிழகத்துக்கு செல்லும் தண்ணீர் வீணாவதை தடுக்கும் மாற்று வழி தான் மேகதாது திட்டம் என சித்தராமையா பேச்சு.

  • வடலூரில் தனியார் பள்ளியில் பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு மாணவர் தலையில் பாய்ந்த ஈட்டி.இந்நிலையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பயிற்சி வழங்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

  • பாரதிய ஜனதாவின் சக்கர வியூகம் தகர்த்தெறியப்படும் என மக்களவையில் ராகுல்காந்தி பேச்சு. மேலும், பட்ஜெட் மீதான விவாதத்தில் அம்பானி, அதானி பெயரை குறிப்பிட்டதால் அரசியல் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

  • மக்களவையின் மாண்பை ராகுல்காந்தி கடைபிடிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம். மேலும், சபையின் கண்ணியத்தை காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

  • நடிகர் தனுஷை வைத்து புதிய திரைப்படம் எடுப்பவர்கள் தங்களை கலந்தாலோசிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தல்.

  • இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு இல்லை என மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி அறிவிப்பு.

  • ஓலிம்பிக் டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் மணிகா பத்ரா. டேபிள் டென்னிஸில் கடைசி 16 பேர் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

  • சர்வதேச டென்னீஸ் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோகன் போபண்ணா. ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் வெளியேறிய நிலையில் முடிவு.