இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

HeadLines | உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை To வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை முதல் வங்கக்கடலில் உருவாகவுள்ளது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 61 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, ஆயிரத்து 964 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை எனவும் அறிவிப்பு வெளியாகிறது.

  • நவம்பர் முதல்வார இறுதியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழையும், நெல்லை, கன்னியாகுமரியில் இன்று மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டப்பட்டது, பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் மக்கள் உற்சாகம்.

  • தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் புகைமூட்டம். பெருங்குடி, ஆலந்தூர், அரும்பாக்கம், வேளச்சேரியில் காற்றின் தரம் மோசமடைந்ததால் மக்கள் அவதி.

  • சென்னை எண்ணூரில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகளை கொளுத்தியபோது தீப்பொறி பட்டதில் நிகழ்ந்த விபரீதம்.

  • ரயில் டிக்கெட் முன்பதிவு காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

  • இங்கிலாந்தில் பதிவு செய்த சிம்பொனி இசை அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகிறது என இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு.

  • அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் விளையாடுகிறார் தோனி. கெய்க்வாட், பதிரனா, துபே, ஜடேஜா ஆகியோரையும் தக்கவைத்தது சிஎஸ்கே நிர்வாகம்.

  • நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்திய அணி.மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடக்கம்.

  • ஸ்பெயினில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஆக அதிகரிப்பு. பலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்.