இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|தீபாவளியை கொண்டாடிய ராணுவ வீரர்கள் To மயோனைஸ் உணவுப்பொருளுக்கு தடை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தீபாவளியை கொண்டாடிய ராணுவ வீரர்கள் முதல் மயோனைஸ் உணவுப்பொருளுக்கு தடை விதித்த தெலுங்கானா அரசு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • அயோத்தி சரயு நதிக்கரையில் ஏற்றப்பட்ட 25 லட்சம் அகல் விளக்குகள். இந்நிலையில், தீப உற்சவத்தையொட்டி 2 கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

  • எல்லைப்பகுதியில் தீபாவளியை கொண்டாடிய ராணுவ வீரர்கள், சக வீரர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகம்.

  • லடாக் எல்லையில் இந்திய - சீனப் படைகள் வாபஸ் பெறும் நடவடிக்கை நிறைவுப் பெற்றுள்ளது.இந்நிலையில், தீபாவளியையொட்டி இனிப்புகளை பரிமாறிக் கொள்ளவுள்ள இருநாட்டு வீரர்கள்.

  • ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • பந்தவ்கர்க் புலிகள் சரணாலயத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 8 யானைகள் குறித்து, விரிவான விசாரணைக்கு மத்தியப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • மயோனைஸ் உணவுப் பொருளுக்கு ஓராண்டு தடை விதித்தது தெலங்கானா அரசு. ஹைதராபாத்தில் மோமோ சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • பெல்லாரி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் நடிகர் தர்ஷன் 6 வாரங்கள் இடைக்காலப் பிணை வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்.

  • டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் அரியணையை இழந்தார் இந்திய வீரர் பும்ரா. கேப்டன் ரோகித் சர்மாவும் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்னடைவு.