Headlines Facebook
இந்தியா

தலைப்புச் செய்திகள்|இன்று மாலை நடைபெறும் தவெக மாநாடு To பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கில் 120 பேர் பலி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இன்று நடைபெறுகிறது விஜய்யின் தவெக மாநாடு முதல் வெள்ளப்பெருக்கில் 120 பேர் உயிரிழப்பு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறுகிறது விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாடு. இதனால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி.சாலை பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • மாநாட்டுத் திடலுக்கு வந்து முன்னேற்பாடுகளை பார்வையிட்ட விஜய். இந்நிலையில், மது அருந்திவிட்டு யாரும் மாநாட்டிற்கு வரக்கூடாது என தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.

  • தமிழக வெற்றிக்கழக மாநாட்டுத் திடலை குடும்பம் குடும்பமாக வந்து பார்வையிடும் மக்கள். இந்நிலையில், க்யூ.ஆர். கோடு மூலம் வருகையை பதிவு செய்ய ஏற்பாடு.

  • மண்ணை உயர்த்திட.. மக்களை உயர்த்திட வந்தார் நேர்மையான தலைவர் என தமிழக வெற்றிக்கழக மாநாட்டையொட்டி விஜய்க்காக உருவான பாடல் இன்று வெளியீடு.

  • நம்மை வாழ வைத்த பெரியாரின் பெயர் சூட்டப்பட்ட தெருவில் வெள்ளம் என அமைச்சர் மூர்த்தியிடம் உருக்கமாக முறையிட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

  • மதுரையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. மாவட்டத்தில் 2ஆயிரத்து 425 கிலோமீட்டர் நீளத்திற்கு வடிகால் அடைப்புகள் நீக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் அறிக்கை.

  • சென்னையில் கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து. இதனால், பயணிகளின் சிரமத்தை குறைக்க கூடுதலாக பேருந்துகள் இயக்கம்.

  • தீபாவளியையொட்டி நெல்லை - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இன்றும் நாளையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

  • விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக டெல்லியில் ஒருவர் கைது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் குறித்த பதிவுகளை நீக்குமாறு பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

  • பாத யாத்திரையின்போது தம்மீது நடந்த தாக்குதலுக்கு பாஜகவே காரணம் என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.மேலும், துணிச்சல் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறட்டும் என சவால்.

  • தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்.இந்தவகையில், நவம்பர் முதல் வாரம் கணக்கெடுப்பு தொடங்கும் என அறிவிப்பு.

  • கேரள மாநிலத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் புகார். வயநாடு பேரழிவுக்கு உரிய நிதியை வழங்கவில்லை என வேதனை.

  • திறன்வாய்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம். இளைஞர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பேச்சு.

  • அரசியல் பாதையில் பயணிக்கும் விஜய்க்கு கங்குவா பட விழாவில் நடிகர் சூர்யா வாழ்த்து. அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும் என பெயரைக் குறிப்பிடாமல் பேச்சு.

  • பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 120க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.

  • ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தவகையில், இறையாண்மையை மீறிய செயல் என கடும் கண்டனம்.

  • டோக்கியோ ஓபன் டென்னிஸ் போட்டி. மகளிர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு சீனா -அமெரிக்கா வீராங்கனைகள் தகுதி.. 69 ஆண்டுகால வரலாற்றை திருத்தி எழுதிய நியூஸிலாந்து.