Headlines Face book
இந்தியா

Headlines | விஜய்-க்கு வக்கீல் நோட்டீஸ் To இஸ்ரேல் பிரதமர் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, விஜய்-க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிஎஸ்பி முதல் இஸ்ரேல் பிரதமர் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்திய ஹமாஸ் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி. இந்நிலையில், தண்ணீரை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • கோபிசெட்டிப்பாளையம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம். இதனால், நம்பியூர் - புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

  • போதைப் பொருட்களை தடுக்க அண்டை மாநில காவல்துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தமிழக காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

  • பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் ஒன்றாம் தேதியும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • மொழியை வைத்து அரசியல் செய்வதை திமுக கைவிட வேண்டும் என தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தல். இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசியலும், ஆன்மிகமும் என்றைக்கும் கலக்காது என உதயநிதி பதில்.

  • ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்து தமிழக அரசு எல்லை மீறுவதாக ஹெச். ராஜா குற்றச்சாட்டு. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் திராவிடர் தான் என பேட்டி.

  • நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நீக்கப்படும் என சீமான் ஆவேசம். மேலும், திராவிடர்களின் சாதனையை கூற முடியுமா என்றும் கேள்வி.

  • தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், கட்சி தலைவர் விஜய்-க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது பகுஜன் சமாஜ்..

  • சென்னையில் தறிகெட்டு ஓடிய கார், வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில், 7 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்நிலையில், ஓட்டுநரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  • ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது இந்தியா கூட்டணி. 70 இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் போட்டி.

  • ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. சராய் கேலா தொகுதியில் போட்டியிடுகிறார் சம்பாய் சோரன்.

  • வயநாடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பு களமிறக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார் என அறிவிப்பு.

  • இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல். இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு பெரும் தவறிழைத்து விட்டதாக நெதன்யாகு காட்டம்.

  • பெங்களூரு டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்சில் இந்திய அணி 462 ரன்கள் குவிப்பு. நியூசிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்கள் இலக்கு.