Headlines facebook
இந்தியா

Headlines|ஹரியானா-ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை To நாளை உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஹரியானா-ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை முதல் நாளை உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • ஜம்மு காஷ்மீரில் 5 எம்.எல்.ஏக்களை நியமிக்க துணை நிலை ஆளுநருக்கு உள்ள அதிகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு.

  • தொழிலாளர்களின் 14 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் தா. மோ. அன்பரசன் பேட்டியளித்துள்ளார்.இந்நிலையில், அரசின் வேண்டுகோளை ஏற்று தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

  • சாம்சங் நிறுவனத்தின் வாக்குறுதிகள் போராட்டத்தை திசை திருப்பும் செயல் என கண்டனம் தெரிவித்த சிஐடியு தொழிற்சங்கம் போராட்டம் தொடரும் என அறிவிப்பு .

  • அரபிக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு எனவும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழலை ஏற்படுத்தும் எனவும் கணிப்பு.

  • நெல்லை, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்ப.மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி உட்பட 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனக் கணிப்பு.

  • நீர்வரத்து அதிகரிப்பால் மஞ்சளார் அணையிலிருந்து 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  • சென்னை கதீட்ரல் சாலையில் 25 கோடி செலவில் ஆறு ஏக்கரில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவைத் திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

  • சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக 4 குளங்களை வெட்டும் பணி தொடக்கம். மேலும்,மழைநீரை சேமிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல் துறை.

  • 'ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என்பதன் அர்த்தம் என்ன? என்று சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.

  • ராமேஸ்வரத்தில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவனை காவல்துறையினர் கண் முன்னே தாக்கிய கிராம மக்கள்.

  • காரைக்குடியில் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணனை வெட்டிய தம்பி.இந்நிலையில், பட்டாக்கத்தியை பறித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த அண்ணன்.

  • கர்நாடகாவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு. மேலும், அமைச்சர்களின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் மேலிடம் அறிக்கை கேட்டதாக தகவல்.

  • இஸ்ரேலின் பாதுகாப்புக்காக ஈரானில் எதிர்த்தாக்குதல் நடத்துவது அவசியம் என்று, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் ஓராண்டையொட்டி நெதன்யாகு பேச்சு.

  • 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு மைக்ரோ ஆர்என்ஏவை கண்டறிந்ததற்காக விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு கூட்டாக அறிவிப்பு

  • மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது வெற்றி. தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.