Headlines facebook
இந்தியா

Headlines |விமானப்படை சாகச நிகழ்ச்சி காண சென்ற 5 பேர் உயிரிழப்பு To அபார வெற்றி பெற்ற இந்திய அணி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, விமானப்படை சாகச நிகழ்ச்சி காண சென்ற 5 பேர் உயிரிழப்பு முதல் அபார வெற்றி பெற்ற இந்திய அணி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு.

  • சென்னை மெரினாவில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போதிய காவலர்கள் நியமிக்கப்படவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு. மேலும், மக்களின் பாதுகாப்பில் அரசு அக்கறை காட்டவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

  • விமானப்படை கோரியதற்கு மேலாகவே தமிழக அரசால் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டன என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்.

  • விமான சாகசம் முடிந்த பின் ஏற்பட்ட நெரிசலில் சிக்கத்தவித்த பொதுமக்கள் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டதாக புகார் .மேலும், காவல்துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஆதங்கம்.

  • விமான சாகசத்தை காண ரயில் நிலையங்களில் குவிந்த மக்கள்.இந்நிலையில்,சென்னையில் நேற்று ஒரே நாளில் புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்ததாக ரயில்வே தகவல்.

  • அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட்டுகளுடன் உதயநிதி பங்கேற்பதாக புகார். இந்நிலையில், அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை.

  • விஜயதசமியையொட்டி தமிழ்நாட்டில் 50- க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி. மேலும், சீருடை அணிந்து கையில் கொடியேந்தி ஏராளமானோர் ஊர்வலம்.

  • மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை. இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. நான்கு மாட வீதிகளில் திரண்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

  • வடமாநிலங்களில் களைகட்டும் நவராத்திரி திருவிழாவில், பார்வையாளர்களை கவர்ந்த பாஜக எம். பி ஹேம மாலினியின் கலைநிகழ்ச்சி.

  • இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி ஓராண்டு நிறைவடையும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டம்.

  • மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அசத்தல். மேலும், வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.