இன்றைய காலை தலைப்புச்செய்திகள் முகநூல்
இந்தியா

HeadLines Today| சிரியாவில் ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல் To சமந்தா-நாக சைதன்யா மணமுறிவு விவகாரம்

இன்றைய காலை தலைப்புச்செய்திகளானது சிரியாவில் ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல் முதல் சமந்தா - நாக சைதன்யா மணமுறிவு குறித்து பெண் அமைச்சர் பரபரப்பு கருத்து வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல் வீரர்கள் மீது பதில் தாக்குதல் தொடுத்த ஹெஸ்புல்லா.இதனால், விமானப்படை தளபதிகள் 3 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • லெபானானைத் தொடர்ந்து சிரியாவிலும் இஸ்ரேல் ஏவுகணை வீசியதில், 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.

  • இஸ்ரேலுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக அமெரிக்கா இருக்கும் என அதிபர் பைடன் உறுதி. மேலும்,ஈரானின் அணு உலை தளவாடம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்.

  • இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம்.மேலும், தங்களுக்கு எதிராக செயல்படுவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டிய நிலையில் குட்டேரஸ் இப்பதிவினை வெளியிட்டுள்ளார்.

  • ஈரானுக்குச்செல்வதை தவிர்க்க வேண்டும் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்.மேலும், இஸ்ரேலில் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தல்படி பாதுகாப்பாக இருக்க அறிவுரை.

  • ஒலிம்பிக் பதக்க வீரர் நீரஜ் சோப்ராவின், தாயார் செய்து கொடுத்த உணவை சாப்பிட்டு உணர்ச்சிமயமான பிரதமர் மோடி பின்னர், விளையாட்டில் நீரஜ் வலிமையுடன் செயல்படுவதை போல, தேசத்திற்காக சேவையாற்ற வலிமை தந்திருப்பதாக கடிதம்.

  • மது ஒழிப்பு மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம். மேலும், தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்.

  • ஆளுநர் ரவி அரசியல்வாதியைப் போல செயல்படுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் மத்திய - மாநில அரசுகளின் உறவை துண்டிக்கும் வகையில் ஆளுநரின் நடவடிக்கை இருப்பதாகவும் கண்டனம்.

  • துணை முதலமைச்சர் உதயநிதி் ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  • சமந்தா - நாக சைதன்யா ஜோடியின் மணமுறிவு குறித்து தெலங்கானா பெண் அமைச்சர் பரபரப்பு கருத்து தெரிவித்தநிலையில், தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியலை புகுத்த வேண்டாம் என சமந்தா கண்டனம்.

  • உலகப்புகழ் பெற்ற குலசை தசரா் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளநிலையில், காப்பு கட்டி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.

  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சென்னை மாநகராட்சி. இதனால், வெள்ளத்திலிருந்து மக்களை மீட்பதற்காக 36 படகுகளை முன்கூட்டி வாங்கப்பட்டுள்ளனர்.

  • மகளிருக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொங்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

  • ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லா நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் அளித்தது வேட்டையன் பட டிரெய்லர். இந்நிலையில், வரும் 10 ஆம்தேதி திரையரங்களில் வெளியாகும் என தகவல்.