காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள்|பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா To குழந்தைகளின் இன்னுயிரை நீத்த வாகன ஓட்டுநர்!

PT WEB
  • கார்கில் போரின் 25ஆவது ஆண்டு வெற்றி தினமான இன்று, போர் வீரர்கள் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துவதற்காக இன்று காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி.

  • பாரீஸில் இன்று கோலாகலமாக தொடங்கும், ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும் விழாவுக்காக விரிவான ஏற்பாடுகள் நடைப்பெற்றது.

  • பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் அசத்திய இந்திய வீரர், வீராங்கனைகள். ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

  • பள்ளி குழந்தைகளை பாதுகாத்து இன்னுயிரை நீத்த வாகன ஓட்டுநருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி.மேலும், ஓட்டுநரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு.

  • உள்ளாட்சித் தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும் என அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்.

  • கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நாமக்கல் லாரி ஓட்டுநர் சரவணன் உயிரிழந்ததாக தகவல். டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக குடும்பத்தினர் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.

  • கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக லாரி ஓட்டுநர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் என நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

  • டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலுடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்தித்து காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளனர்.

  • கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்யும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் நீர்திறப்பு, விநாடிக்கு 86 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

  • தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எந்த தாமதமும் இல்லை என மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.

  • சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் களம். இந்நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்புடன், செப்டம்பர் 10ஆம் தேதி நேரடி விவாதத்தில் பங்கேற்க போவதாக கமலா ஹாரிஸ் அறிவிப்பு.