இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

180-க்கும் மேற்பட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான் - விஜய் 69 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 180-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான் முதல் விஜய் 69 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க முயற்சித்த ஈரான், இஸ்ரேல் மீது 180-க்கும் மேற்பட் ஏவுகணைகளை வீசி தாக்குதல்.

  • இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. உரிய விலையை கொடுக்கவேண்டி வரும் என இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் சூளுரைத்துள்ளார்.

  • இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.மேலும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டுகோள்.

  • இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து விமான போக்குவரத்து பாதிப்பு. சென்னைக்கு வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரியாதிற்கு திருப்பப்பட்டது.

  • இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிப்பதாக ஜோ பைடன் உறுதி. ஈரான் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்திய அமெரிக்க படைகள்

  • ஜம்மு காஷ்மீரில் அமைதியாக முடிந்தது இறுதிக்கட்ட தேர்தல். மூன்று கட்டங்களிலும் சேர்த்து 63.45 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தகவல்

  • வேலைதேடி சென்னைக்கு வந்த மேற்கு வங்கத் தொழிலாளர் பட்டினியால் உயிரிழந்த பரிதாபம். இவருடன் பட்டினியால் மயங்கி விழுந்து சிகிச்சை பெற்ற 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

  • அக்டோபர் 3 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • ரஜினிகாந்த் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவனை தகவல். ரஜினி நலமுடன் சிரித்துப் பேசுவதாக இதய மருத்துவ நிபுணர் சொக்கலிங்கம் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.

  • நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து லதா ரஜினிகாந்திடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ந்து, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் தளத்தில் பதிவு.

  • நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப நடிகர் விஜய் வாழ்த்து. பூரண நலத்துடன் இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

  • அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பின் முதல் முறையாக தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 8-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

  • அதிமுக இழந்த பத்து சதவிகித வாக்குகளை பெறும் வகையில் செயலாற்ற வேண்டும் என கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்.

  • இபிஎஸ்ஸை அண்ணன் எனக் குறிப்பிட்டு பதிவிட்ட ஓபிஎஸ் மகன்.... எடப்பாடி பழனிசாமி மீது செல்போனை எறிந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • செந்தில் பாலாஜி விவகாரத்தில் திமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை என ராமதாஸூக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்.

  • காஞ்சி ஏகாம்பரஸே்வரர் கோயிலுக்கு சொந்தமான சோமஸ்கந்தர் சிலை அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது கண்டுபிடிப்பு. இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டு வர தமிழக சிலை தடுப்புப் பிரிவு நடவடிக்க மேற்கொண்டுள்ளது.

  • சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ வசம் விசாரணையை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது பாம்பன் புதிய ரயில் பாலம். 20 அடி உயரம் வரை பாலத்தை தூக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

  • சென்னை மெரினாவில் ஹெலிகாப்டர்கள், விமானங்களில் விமானப்படையினர் சாகசம்.

  • நடிகர் விஜய் நடிக்கும் 69-ஆவது படத்தில் இணைந்தார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். இதுக்குறித்து போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு.