இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு To வெளியானது வேட்டையன் டீசர்!

PT WEB
  • இலங்கை அதிபர் தேர்தலில் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இதில், ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச, அனுராகுமாரா உட்பட 38 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

  • திருப்பதி லட்டில் மிருகக்கொழுப்பு கலக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆந்திர அரசிடம் விளக்கம் கேட்டார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா.

  • லட்டில் கலப்படம் தொடர்பான செய்தி கவலை தருவதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து.

  • முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள், திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மையை குலைத்துவிட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு.

  • 100 நாள் ஆட்சியின் தோல்விகளை திசைத்திருப்பவே கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவதாக ஜெகன்மோகன் விளக்கம் .

  • 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில், ஐநா சபையில் உரையாற்றுவதுடன் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்பை சந்திப்பார் எனவும் தகவல்.

  • மாற்றுத்தினாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை இருமடங்காக அதிகரிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம் என தெரிவித்துள்ளார்.

  • 4 நாட்களுக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தொழிலாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை.இதற்கு, பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுமாறு தொழிலாளர்கள் வலியுறுத்தல்.

  • கோவை அருகே சட்ட விரோதமாக மண் அள்ளியவர்களை உடனே கைது செய்ய உயர் நீதிமன்றம் ஆணை. மண் அள்ளப்படுவதை மனுதாரர் வீடியோ காலில் நேரடியாக காட்டிய நிலையில் நீதிபதி உத்தரவு.

  • திருவண்ணாமலை மலைச்சரிவில் தீப்பிடித்து 5 ஏக்கர் வனப்பகுதி நாசம். இதில், அரிய வகை மரங்கள், மூலிகைச்செடிகளும் கருகின.

  • லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல். இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்.

  • சென்னை கிரிக்கெட் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்டது வங்கதேசம். 308 ரன் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியது இந்தியா.

  • அதிரடி ஆக்சன் காட்சிகள்; என்கவுன்டரை ஆதரிக்கும் வசனங்களுடன் வெளியானது ரஜினிகாந்தின் வேட்டையன் பட டீசர்.