தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | அமைச்சர் போட்ட பதிவு முதல் மணிப்பூரில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் வரை!

தலைப்புச் செய்தியானது, அமைச்சர் அன்பில் மகேஸ் போட்ட பதிவு முதல் தீவிரமடையும் மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • ஜனநாயகமும், தொழில்நுட்பமும் மனிதகுலத்தின் நலனை உறுதிசெய்யமுடியும் என செமிகண்டக்டர் தொழில்முனைவோருடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி பேச்சு.

  • அமெரிக்காவில் எம்.பிக்கள் மற்றும் பைடன் அரசின் அதிகாரிகளுடன் ராகுல் காந்தி சந்திப்பு. இந்நிலையில், “இட ஒதுக்கீடு 50%-க்கு மேல் அதிகரிக்கப்படவேண்டும்” என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என பேட்டி.

  • தேசிய கல்விக் கொள்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல அம்சங்களை தமிழக அரசு செயல்படுத்திவருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு. இந்நிலையில், நிபந்தனைகளின்றி சமக்ரா சிக்ஷா நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசுக்குவலியுறுத்தல்.

  • அரசே மதுபான கடையை திறந்துவைத்துக்கொண்டு இறப்புக்கு இழப்பீடு வழங்குவதை நியாயப்படுத்த முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சனம்.

  • விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பால் தமிழக அரசியலில் சலசலப்பு.

  • திருமாவளவன் அழைப்பு குறித்து கட்சி தலைமையே முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

  • மாநாட்டில் பங்கேற்பது அதிமுகவின் விருப்பம் என செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.

  • திருமாவளவன் திமுகவை எதிர்க்கவில்லை என அமைச்சர் முத்துசாமி கருத்து. மேலும், முதலமைச்சரை விட்டு போகமாட்டார் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை.

  • வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்.

  • பணிக்குத்திரும்ப வேண்டும் என்ற உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை நிராகரித்த கொல்கத்தா மருத்துவர்கள். இந்நிலையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு.

  • மணிப்பூரில் முதலமைச்சர் மற்றும் ஆளுநரை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரம். காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு. இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு இணையதள சேவை முடக்கம்.

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ், டொனால்ட் ட்ரம் முதல் முறையாக நேரடி விவாதம். இந்நிலையில், போட்டியிலிருந்து விலகிய ஜோ பைடனை விட கமலா சிறப்பாக செயல்படுவாரா? என எதிர்பார்ப்பு.