இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|இந்தியாவில் ஒருவருக்கு M pox தொற்று To 29 பதக்கங்களுடன் இந்தியா!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இந்தியாவில் ஒருவருக்கு M pox தொற்று முதல் 29 பதக்கங்களுடன் இந்தியா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • பாரிஸில் நடைபெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவானது, கண்ணை கவர்ந்த வானவேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

  • பாராலிம்பிக்ஸில் இதுவரை இல்லாத வகையில் 7 தங்கம் உள்பட 29 பதக்கங்களுடன் இந்தியா 18ஆவது இடத்தை பெற்றுள்ளது.

  • பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்திருந்ததற்கு, இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • அரசியலில் அன்பை புகுத்த வேண்டும் என பாரத் ஜோடோ யாத்திரை குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு.

  • திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? என முதலமைச்சர் சென்னை திரும்பியதும் பரிந்துரை அளிக்கப்போவதாக கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு தகவலளித்துள்ளது.

  • தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியானது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்தவகையில், முதல் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் காவல்துறையும் அனுமதி அளித்துள்ளது.

  • நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கான கலைநிகழ்ச்சியில் ரஜினி, கமல் இணைந்து நடிப்பார்கள் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கார்த்தி தகவல்.

  • சர்ச்சைக்குரிய பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு .இந்நிலையில், சித்தர்கள் தன்னிடம் சொன்னதையே பேசியதாக காவல்துறையிடம் வாக்குமூலம்.

  • தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நீர்நிலைகளில் கரைத்த பொதுமக்கள்.இந்நிலையில், கும்பகோணம், தேனி உள்ளிட்ட இடங்களில் தகராறு ஏற்பட்டது.

  • காவல்துறையினருடன் வாக்குவாதம் போடி அருகே விநாயகர் சிலையை கரைத்து ஊர் திரும்பிய போது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு.மேலும், இருவர் காயம்.

  • பெண் பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தில் மேற்குவங்கத்தில் நீடிக்கும் மக்களின் போராட்டத்தால், அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்ட மாநில முதல்வருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

  • இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.

  • சீனாவில் பழமையான பாலைவன நகரில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன்கள் மற்றும் ஒளி நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், முதன் முறையாக பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்.